இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

அத்துடன், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 236 பந்துகளில் ஆட்டமிழக்காது 214 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் சர்ஃபராஸ் கான் இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அரை சதம் கடந்தார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்களை குவித்தார். டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளைய இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற பெயரைப் பெற்றார்.

இந்த இரட்டைச் சதம் அடித்த ஒன்பது நாள் இடைவெளிக்குப் பிறகு ராஜ்கோட் டெஸ்டில் ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை படைத்தார்.

அவரைத் தவிர, விராட் கோலி, சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளி, குண்டப்பா விஸ்வநாத், ராகுல் டிராவிட், சேதேஷ்வர் புஜாரா உள்ளிட்டவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

அத்துடன், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த 30 ஆண்டு கால இந்திய சாதனையையும் ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

அவர் 10 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதன் மூலம் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் 30 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார்.

இந்திய அணி சார்பில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் விபரங்கள் வருமாறு,

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 10

நவ்ஜோத் சிங் சித்து – 1994 இல் லக்னோவில் இலங்கைக்கு எதிராக 8

மயங்க் அகர்வால் – 2019 இல் இந்தூரில் பங்களாதேஷூக்கு எதிராக 8

Recommended For You

About the Author: admin