புற்றுநோய் என்றாலே ஆபத்தான உயிர் கொல்லிதான். புற்றுநோயில் பல வகை உண்டு.
சில வகை புற்றுநோய்களுக்கு இன்று வரை மருந்துக்களே இல்லை.
இன்று நாம் எலும்பு புற்றுநோய் குறித்து பார்க்கலாம். எலும்பு புற்றுநோய் என்பது பொதுவாக உண்டாகும் புற்றுநோய்களில் ஒன்று.
இந்த எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மிக கடினமான அறிகுறிகள் முதல் சாதாரண அறிகுறிகள் வரை பல்வேறு வகையான அறிகுறிகள் உண்டாகலாம்.
அறிகுறிகள்
எலும்புகளில் தொடர்ச்சியான வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
திடீர் எடை இழப்பு உங்களுக்கு சில பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கலாம்.
அதேபோல தான் இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை உண்டானால் அதுவும் கூட எலும்பு புற்றுநோயாக இருக்கலாம்.
அதிகமாக நடக்கவோ, உட்காரவோ முடியாமல் மூட்டுகளில் அசைவுகள் எதுவும் இல்லாமல் போனால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம்.
காய்ச்சல் கூட எலும்பு புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
மற்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுடன் சேர்ந்து காய்ச்சலும் ஏற்பட்டால் உடனே சோதனை செய்து பார்ப்பது மிக அவசியம்.அது எலும்பு புற்றுநோயின் மிக மு்க்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும்.
எலும்பின் மேல் கட்டிகள் தோன்றலாம்.
எலும்பு எளிதில் உடைந்து பலவீனமான எலும்பு அமைப்பை உருவாக்கும் ஒருவித நிலை கூட எலும்பு புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்று.
சிலருக்கு மூட்டுகளில் விறைப்பு ஏற்படலாம். மூட்டுகளில் ஏற்படும் விறைப்பு காரணமாக சிலருக்கு அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை எளிதாக செய்ய முடியாமல் மிகவும் கடினமாகதக இருக்கலாம்.
முக்கிய குறிப்பு
இது போன்ற சாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். இல்லை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.