சர்வஜன வாக்கெடுப்பை நடத்த ஆலோசிக்கும் ரணில்

தென்னிலங்கை அரசியலில் சமகால போக்கு பாரம்பரிமான கட்சிகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியே இதற்கு காரணமாக உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவான பொதுஜன பெரமுன 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிமன்றம் தேர்தலுடன் இலங்கையில் செல்வாக்குமிக்க கட்சியாக உருவெடுத்தது.

ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்தக் கட்சியின் செல்வாக்கில் பாரிய சரிவு ஏற்பட்டதுடன், பொதுஜன பெரமுடுன அதிகாரத்தில் இருந்த ராஜபக்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்யும் நிலைமை ஏற்பட்டது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவினவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் கணிசமான வாக்குகள் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று அண்மைய ஜே.வி.பியின் இந்திய பயணமும், புதுடில்லி அநுர தலைமையிலான உயர்மட்ட குழுவுக்கு அளித்த சிவப்பு கம்பள வரவேற்பும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரணிலின் நகர்வு

‘அரகலய’ எனப்படும் காலி முகத்திடல் போராட்டத்துக்கு பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்புகளில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணிக்கான ஆதரவுகள் அதிகரித்துள்ளன.

37 வீதத்துக்கும் அதிகமான மக்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை எதிர்காலத்தில் விரும்புவதாக இன்ஸ்டியுட் ஒவ்ஹெல்த் பொலிசி என்ற நிறுவனம் (Institute of Health Policy) நடத்திய கருத்துக் கணிப்பில் மக்கள் தெரிவித்திருந்தனர்.

fhf

தேசிய மக்கள் சக்தி மீது பாரம்பரிய கட்சிகளுக்கு பல அச்சங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தேர்தலை வெற்றிக்கொள்ள ரணில் தரப்பு பல்வேறு நகர்களில் ஈடுபடலாம் எனத் தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில்தான் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பில் கருத்துகளும் வெளியாகி வருகின்றன.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் பேசுபொருளாக உள்ள விடயம். அதனை எவரும் எதிர்க்க முடியாது என்பது ரணிலின் கணிப்பு. இந்த விவகாரத்தை கையில் எடுத்தால் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என்பதும் ரணிலின் கணிப்பு.

இந்த நிலையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்,

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயமாக வெற்றிபெற்று ஜனாதிபதியாகுவார். பொதுத் தேர்தலிலும் எமது அரசாங்கமே அமையும். அடுத்த பொதுத் தேர்தலில் அநுர எதிர்க்கட்சித் தலைவராக வருவார். அநுரவின் அண்மைய இந்திய விஜயம் மிகவும் நல்ல விடயம்.” எனத் தெரிவித்தார்.

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா அடுத்து நடைபெறும் என்பது தொடர்பில் பல கருத்தாடல்கள் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்ற பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் கூட்டணிகளை பலப்படுத்துவது தொடர்பிலான நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித் பிரேமதாச நேற்று புதன்கிழமை முக்கிய உடன்படிக்கையொன்றையும் கைச்சாத்திட்டிருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆளுங்கட்சியின் கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் அறிய முடிகிறது

Recommended For You

About the Author: admin