இன்றைய ராசிபலன்கள் 11.02.2024

மேஷம்
நிர்வாகத்தில் மேலாண்மை வலுப்பெறும். சிறந்த நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். தொழிலில் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் காணப்படும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொருளாதார ஏற்றம் இருக்கும்.
பரிகாரம்- சுந்தர காண்டம் பாராயணம் செய்யவும்
ரிஷபம்
தொழிலில் புத்தம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். நிபுணர்களின் உதவியை பெறுவீர்கள். நல்ல வருமானம் கிட்டும். முதலீடு மூலமாக இழப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு புத்திசாலித்தனமாக வேலை செய்யவும்.
பரிகாரம்- பசுவிற்கு பச்சை புல் அல்லது கீரை வழங்கவும்.
மிதுனம்
வேலையில் நேர மேலாண்மை அதிகரிக்கும். புதிய மற்றும் புத்தாக்கமான விஷயங்களை செய்வது பற்றி யோசித்து கொண்டே இருப்பீர்கள். தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். பல்வேறு விதமான வேலைகளை துவங்குவதற்கு விருப்பம் காட்டுவீர்கள்.
பரிகாரம்- ஹனுமான் மந்திரத்தை பாடவும்
கடகம்
வெவ்வேறு வேலைகளை புரிந்து கொள்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் பல்வேறு சூழ்நிலைகளை கையாள வேண்டிய நிலை ஏற்படலாம். இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் விரைந்து செயல்படுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமையும்.
பரிகாரம்- ஒரு ஏழை நபருக்கு சிவப்பு பழத்தை தானமாக வழங்கவும்
சிம்மம்
வேலையில் உங்களது செயல்திறன் அதிகரிக்கும். நிலுவையில் இருக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் சிறப்பாக உதவி செய்வார்கள்,
பரிகாரம்- ஹனுமான் கடவுளுக்கு ஆரத்தி எடுக்கவும்.
கன்னி
பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிறப்பான சலுகைகளை பெறுவீர்கள். தொழிலில் சிறப்பாக செயல்படுவீர்கள். முன்னோர்களின் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கான லாப சதவீதம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
பரிகாரம்- ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும்
துலாம்
தொழில் சிறப்பாக நடைபெறும். இலக்குகளை விரைவாக அடைவீர்கள். லாபத்திற்கான வாய்ப்புகள் மேம்படும். பணியிடத்தில் இலக்கை முடிக்க போதுமான அளவு நேரம் இருக்கும். வேலைகளை கையாளும் வேகம் அதிகரிக்கும்.
பரிகாரம்- ஹனுமான் மந்திரத்தை பாடவும்.
விருச்சிகம்
பிறரது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வீர்கள். விஷயங்களை கணிக்க முடியாத நிலை நிலவும். தொழில் வழக்கம்போல நடைபெறும். ஒப்பந்தங்களை பின்பற்றுவீர்கள். குறுகிய மனப்பான்மையை தவிர்க்கவும்.
பரிகாரம்- ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாடவும்.
தனுசு
தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் வெற்றியில் முடிவடையும். இலக்குகளை அடைவதில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். நெருங்கிய நபர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். டீல்கள் நீங்கள் நினைத்தபடி முடிவடையும். எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவீர்கள். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தீவிரம் காட்டுவீர்கள்.
பரிகாரம்- அருகில் வசிக்கும் ஏழை நபருக்கு தேவைப்படும் உதவியை செய்து கொடுக்கவும்
மகரம்
நீங்கள் விரும்பிய இலக்கை அடைவதில் வெற்றி கிடைக்கும். சூழ்நிலைகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும், செல்வம் பெருகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் இன்று ஏற்படும் முன்னேற்றம் உங்கள் போட்டியாளர்களை பிரமிக்க வைக்கும்.
பரிகாரம்: அரச மரத்தடியில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்
கும்பம்
தொழிலில் சுமுகமான வளர்ச்சி காணப்படும். உங்களுடைய யோசனைகள் உங்களை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும். பணிக்கு செல்பவர்களுக்கு சிறப்பான சூழ்நிலை அமையும். பொருளாதார விஷயங்களில் பொறுமை காப்பீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
பரிகாரம்- ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்யவும்
மீனம்
தொழில் சம்பந்தப்பட்ட உறவுகள் வலுப்பெறும். வேலையில் பாசிட்டிவாக அனைத்தையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சாதகமாக அமையும். பணியிடத்தில் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். லாபத்தில் கவனம் செலுத்துவீர்கள். பொறுப்புகளை பூர்த்தி செய்வீர்கள். முக்கியமான விஷயங்கள் விரைந்து நடைபெறும்.
பரிகாரம்- சிவபெருமானுக்கு தண்ணீர் வைத்து வழிபடவும்.

Recommended For You

About the Author: admin