‘இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்’: புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது.

ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் கறுப்பு தினமாக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் லண்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழர்களுக்கு சர்வதேச மத்தியஸ்தத்துடனான தீர்வை வழங்க ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு மிக அருகில், தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடிக்கு நிகராக புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகின்றது.

Recommended For You

About the Author: admin