ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை (03) உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த வார இறுதியில் ஜோர்தானில் மூன்று அமெரிக்க வீரர்களை கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானிய ஆதரவு போராளிகள் மற்றும் ஈரானிய புரட்சிகர காவலர்களால் பயன்படுத்தப்படும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பல தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதலை நடத்தியது.
அதன்படி, ஈராக்கின் ஏழு இடங்களில் 85 க்கும் மேற்பட்ட தளங்கல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலானது, “ஈராக் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை படுகுழியின் விளிம்பில் வைத்துள்ளது” என்று ஈராக் அரசாங்கம் கூறியது.