வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே பணிபுரியும் திட்டத்தினை ஜேர்மனி அரசு நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளைமுதல் 6 மாதங்களுக்கு, குறித்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் மீதமுள்ள 3 நாட்களை விடுமுறையாக வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஜேர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதோடு, இதன்மூலம் நாட்டில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் எனவும் ஜேர்மனி அரசு எதிர்பார்க்கிறது.
உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின்,பிரித்தானியா ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.