சத்தமின்றி ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை

சத்தமின்றி சுமார் ஒரு மில்லியன் ரூபாவில் பண்ணை அமைத்துக் கொடுத்த சுவிஸ் தம்பதிகள்.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வித்தற்பளை கெற்பேலி கிராமத்தில் வாழ்வாதார தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு சுமார் 1 மில்லியன் ரூபா பெறுமதியில் பாரிய கோழி பண்ணை ஒன்று அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

விடத்தற்பளை கிராமத்தை சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்ற துஷ்யந்தன் நந்தினி தம்பதிகளின் நிதி பங்களிப்பிலியே குறித்த வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 30 அடி நீளமான கோழி பண்ணை, 500 முட்டைகள் ஒரே நேரத்தில் வைக்கக்கூடிய குஞ்சு பொரிக்கும் இயந்திரம் மற்றும் ஒரு தொகுதி கோழிக்குஞ்சுகளும் அதற்கு தேவையான தீவனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் ஒரு மில்லியன் ரூவா நிதி பங்களிப்பில் குறித்த வாழ்வாதாரத்துக்கான கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பண்ணை கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது. நிகழ்வில் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் மற்றும் துஷ்யந்தன் நந்தினி தம்பதிகளின் குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சத்தம் சந்தடியின்றி ஒரு குடும்பத்திற்கு மில்லியன் ரூபாவில் பூரண வாழ்வாதர உதவியை வழங்கிய துஷ்யந்தன் நந்தினி தம்பதிகளின் செயலை கிராம மக்கள் அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin