யாழ் பல்கலைக்கழகத்தில் 108 பானையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 108 பானையில் 11 பீடங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட தமிழர் தேசியப் பொங்கல் விழா 26.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்ட பொங்கல் நிகழ்வில் மாணவர்களால் 108 பானையில் பொங்கல் பொங்கப்பட்டதோடு, கயிறிழுத்தல், தலையணைச் சண்டை, முட்டி உடைத்தல் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களோடு, மாலை கைலாசபதி கலையரங்கில் கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பல்கலைக்கழகமே விழாக்கோலம் பூண்டிருந்த பொங்கலுக்கான முதன்மைப் பங்காளர்களாக நர்மதா நகைமாடத்தினர் உடன்நின்றதோடு, அனைத்துப் பீட மாணவர்களையும் ஒருங்கிணைவென்பது பல ஆண்டுகளின் பின்னர் சாத்தியமனதும் நோக்கத்தக்கது. மேலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் பொங்கல் நிகழ்வில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.