ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
“ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் நிதி அமைச்சர், பொருளாதார அமைச்சர் என்றெல்லாம் ஜனாதிபதிதான் கூறிவருகின்றார். அவர் உட்பட சிலருக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை சீர்குலைக்கும் தேவைப்பாடு உள்ளது, அதனால்தான் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இப்படியான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன.
நான் நிதி அமைச்சை கேட்கவும் இல்லை, அது வழங்கப்படும் என உறுதியளிக்கப்படவும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் உள்ள ஒருவருக்குதான் நிதி அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.
இதேவேளை, புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி களமிறங்கியுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த கூட்டணியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை அறிவிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.