லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல்: பத்திரிகை ஆசிரியர் நீக்கம்

அரசாங்கத்தின் ஊடக நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல் காரணமாக நிறுவனத்தின் சிங்கள வார இதழ் பிரதம ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சிலுமின பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய தர்மன் விக்கிரமரத்னவே அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லேக்ஹவுஸில் ஏற்பட்டுள்ள பாரிய உள்ளக மோதல் நிலையின் பெறுபேறாகவே தர்மன் விக்கிரமரத்ன ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர் என்று சிலுமின பிரதம ஆசிரியர் தர்மன் விக்ரமரத்ன மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு எதிராக பல நிதி முறைகேடுகள் மற்றும் பிற ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிலுமின ஆசிரியர்பீடத்தில் கடந்த சில நாட்களாக தர்மன் விக்ரமரத்னவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin