அமெரிக்கப் போர்க் கப்பலான USS John Finn, சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தாய்வான் நீரிணை வழியாக நேற்று சென்றுள்ளது.
தாய்வான் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு பின்னர் அமெரிக்கப் போர் கப்பல் அந்த வழியாக செல்வது இதுவே முதல்முறை.
தாய்வான் நீரிணை வழியாக அமெரிக்க போர் கப்பல் சென்றமை தொடர்பில் சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
எனினும் தமது போர் கப்பல் சென்ற கடல்பகுதி எந்த நாட்டுக்கும் சொந்தமானது அல்ல எனவும் அது சர்வதேச கடல் பகுதி எனவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
தாய்வான் நீரிணை வழியாக அமெரிக்கப் போர்க் கப்பல் சென்றமையானது அனைத்து நாடுகளின் தடையற்ற கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையை காட்டுவதாகவும் சுதந்திரத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க எந்த ஒரு நாடும் அச்சுத்தப்படக்கூடாது எனவும் எஅமெரிக்கக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே தாய்வான் நீரிணை வழியாக சென்ற அமெரிக்கப் போர் கப்பலை சீனக் கடற்படையினர் மிக உன்னிப்பாக அவதானித்ததாகவும் அந்த கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் சீன இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அமைதியையும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் ஆத்திரத்தை தூண்டும் நடவடிக்கைகளில் அமெரிக்கா அண்மைக்காலமாக அடிக்கடி ஈடுபட்டு வருவதாக என சீன இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.