இன்றைய ராசிபலன்கள் 24.01.2024

மேஷம்:
இன்று வேலை செய்யும் இடத்தில் உங்களது புதிய திட்டங்கள் கை கொடுக்கும். பணம் சம்பந்தமான வேலைகளில் கவனம் தேவை. ஆபத்தான அல்லது தேவையற்ற செயல்களில் ஆர்வம் காட்டுவதால் நஷ்டம் ஏற்படும். இன்று பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற நாள்.
பரிகாரம்:- பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறுங்கள்

ரிஷபம்:
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று கிடைக்கும் புதிய தொடர்புகளால் பலன்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மற்றும் சக ஊழியர்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையான ஆதரவைப் பெறுவார்கள். இன்று பணவரவு சுமாராகவே இருக்கும். இன்று எந்த வேலைகளையும் பார்ட்னர்ஷிப் சேர்ந்து செய்வதில் முனைப்பு காட்டாதீர்கள்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்

மிதுனம்:
உங்களது அமைதியை கெடுக்கும் பழைய சர்ச்சைக்குரிய விஷயங்கள் இன்று உங்கள் வழியில் வரலாம் முக்கிய விஷயங்களில் அவசரம் காட்டுவதை தவிர்க்கவும். புதிய முதலீடு விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரிகள் தங்களது புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை. தொழில் விரிவாக்கத்தில் கவனம் செலுத்த இன்று ஏற்ற நாள் அல்ல.
பரிகாரம்: லட்சுமி தேவியை வழிபடுங்கள்

கடகம்:
இன்றைய நாளில் உங்களுக்கான நற்பலன்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பான லாபம் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். பொருளாதாரம் அதிகரிக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும். இலக்கை நோக்கி செயல்பட தேவையான தைரியம் அதிகரிக்கும்.
பரிகாரம்:108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்

சிம்மம்:
வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும், லாபம் அதிகரிக்கும். செல்வம் பெருகும், இலக்குகளை நோக்கி செயல்படுவது உங்களுக்கான மதிப்பை அதிகரிக்கும். ஊழியர்களுக்கு இன்று போனஸ் அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றவும்

கன்னி:
இன்று நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். வியாபார நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும். புதிய திட்டங்கள் மூலம் லாபம் பெறுவீர்கள். நெருங்கிய கூட்டாளிகளுடன் சச்சரவு ஏற்படலாம் என்பதால் மோதலை தவிர்க்க அமைதியை கடைப்பிடிக்கவும். பொருளாதார ரிதியாக இன்று நீங்கள் வலுவாக இருப்பீர்கள்.
பரிகாரம்: பைரவர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடுங்கள்

துலாம்:
இன்று உங்கள் புத்திசாலித்தனத்தால் அனைவரும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புத்திசாலித்தனமாக செயல்படுவது உங்களை சிக்கலில் இருந்து காப்பாற்றும். சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்களின் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
பரிகாரம்: தெரு நாய்களுக்கு உணவு வைக்கவும்

விருச்சிகம்:
புதிய திட்டம் மற்றும் முயற்சிகளில் வேகமாக இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே ஆற்றலாகவும், சுறுசுறுப்பாக இருங்கள். தேவையான பணிகளை துரிதப்படுத்துங்கள். இதன் மூலம் உங்களின் பொருளாதார பலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் தேவையான மாற்றங்களை செய்வது லாபத்தை அதிகரிக்க உதவும்.
பரிகாரம்: முதியோர் இல்லங்களுக்கு சென்று உரிய உதவிகளை செய்யுங்கள்

தனுசு:
இன்று உங்களுக்கு அறிமுகமாகும் புதிய நபர்களை உடனடியாக நம்பாதீர்கள். இல்லை என்றால் மோசடியால் பாதிக்கப்படுவீர்கள். முக்கியமான பணிகளில் இன்று நீங்கள் வேகமெடுக்க வேண்டியிருக்கும். முக்கிய ஒப்பந்தங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை பெற பொறுமை அவசியம். முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம், கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: பசுமாடுகளுக்கு தீவனம் வைக்கவும்

மகரம்:
வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கள் துறை ரீதியாக சாதனைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்களை சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்களுக்கு இன்று கிடைக்க கூடிய பொருளாதார பலன்கள் சிறப்பாக இருக்கும். எனினும் பரிவர்த்தனைகளில் தெளிவாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: ஏழைக் குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கவும்

கும்பம்:
தனிப்பட்ட வேலை காரணமாக உங்களின் தொழில் ரீதியான விஷயங்களில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகும். இதனால் திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் சுணக்கம் ஏற்படலாம். கூட்டுத் தொழிலில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்

மீனம்:
இன்று நீங்கள் எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தைரியமாக தொடங்கலாம். தொழில் தொடர்பான பயணங்கள் நன்மைகளை அளிக்கும். நிலுவையில் இருந்த விஷயங்களில் இன்று குறிப்பிடத்தக்க முடிவுகள் எட்டப்படும். முக்கிய விஷயங்களில் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம்: மாற்று திறனாளி நபர்களுக்கு சேவை செய்யவும்

Recommended For You

About the Author: admin