யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மன் மகா கும்பாபிஷேம்: படையெடுத்த புலம்பெயர் தமிழர்கள்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை இடம்பெறவுள்ளது.

நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோபுரங்கள் , தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவுள்ள மகா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

பக்தர்களினதும், சுற்றுலா பயணிகளினதும் நலன்கருதி விசேட போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin