அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காற்று இந்த வாரமும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடும் குளிரால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.