மேற்குலக உதவியை எதிர்பார்க்கும் உக்ரைன் ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பல மேற்குலக நாடுகளிடம் இருந்து இராணுவ,பாதுகாப்பு தொடர்பான உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நட்புறவு நாடுகளுடன் புதிய உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாராகி வருவதாகவும் அவை வலுவான இருதரப்பு உடன்படிக்கைகள் எனவும் செலன்ஸ்கி நேற்று கூறியுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்த உடன்படிக்கைகளின் பிரதிபலன்கள் அறியகிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததுடன் அந்த நாட்டின் சில பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த நிலையில், மேற்குலக நட்பு நாடுகள் ஒன்றிணைந்து என்றுமில்லாத அளவுக்கு உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் உட்பட ஏனைய உதவிகளை வழங்கின.

போர் ஆரம்பித்து மூன்றாவது ஆண்டு நெருங்கும் நிலையிலும் போரில் கடந்த 12 மாதங்களாக எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin