மேஷம்:
இன்றைய நாள் உங்கள் படைப்பாற்றலை வளர்க்க ஏற்ற நாளாகும். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடுங்கள். கொடுக்கப்படும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். விடா முயற்சி இன்று உங்கள் வெற்றிக்கான திறவுகோலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி கூறி அவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – கால்பந்து மைதானம் அதிர்ஷ்ட நிறம் – எமரால்ட் அதிர்ஷ்ட எண் – 26
ரிஷபம்:
அறிவை வளர்க்கும் வாய்ப்புகளை தேடுவதில் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் திறம்பட தொடர்பு கொள்வதற்கான உங்கள் திறன் இன்று உங்களை தனித்து காட்ட கூடும். உங்கள் யோசனைகளை தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம் உங்கள் மதிப்பு கூடும். சாகச பயணம் அல்லது விரும்பிய இடங்களுக்கு செல்வது உங்கள் நாளை உற்சாகமாக வைக்கும். புதிய நிதி முதலீடுகளுக்கு ஏற்ற பணவரவு இன்று இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் – விண்டேஜ் கேன் அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் அதிர்ஷ்ட எண் – 35
மிதுனம்:
உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு அற்புதமான வாய்ப்பு இன்று கிடைக்கலாம். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் கடின உழைப்பு மூலம் நீங்கள் பாராட்டு மழையில் நனையலாம் . குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் ஆற்றலை புதுப்பிக்க ஒரு ஜாலி ட்ரிப் செல்ல திட்டமிடுங்கள். முன்பு கிடைத்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை பெற்று அதன் மூலம் இன்று எச்சரிக்கையாக இருங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – கொடி அதிர்ஷ்ட நிறம் – கிரிம்சன் அதிர்ஷ்ட எண் – 49
கடகம்:
இன்று உங்களது உணர்ச்சி ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். முக்கிய விஷயங்களில் உங்கள் உள்ளுணர்வு செல்வதன்படி கேட்டு நடங்கள். உங்கள் குடும்பத்திற்கு தேவையான ஆதரவு வழங்குங்கள். உங்கள் வசம் ஒப்படைக்கப்படும் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். வேலைகள் அதிகம் இருந்தாலும் உடல் ஓய்வு உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட அடையாளம் – அத்தி மரம் அதிர்ஷ்ட நிறம் – மெட்டாலிக் அதிர்ஷ்ட எண் – 72
சிம்மம்:
உங்கள் நிர்வாகத் திறன்கள் உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தரும். உங்களை வழிநடத்தும் பொறுப்பை வயதில் மூத்தவர்களிடம் விட்டு விடுங்கள். அன்பு மற்றும் கவனிப்பு மூலம் குடும்ப உறவுகளை மேம்படுத்த கவனம் செலுத்துங்கள். நீண்ட கால இலக்குகளை இன்று அடைவதன் மூலம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் – பசுஞ்சோலை அதிர்ஷ்ட நிறம் – பிங்க் அதிர்ஷ்ட எண் – 11
கன்னி:
இன்று செய்யும் செயல்களில் உங்களது கவனம் சிதற கூடாது, முறையான அணுகுமுறைகள் வெற்றியைத் தரும். நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாக இருப்பது மோதல்களை குறைக்க உதவும். இன்று உங்களுக்கு வேறு வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சிக்கனமாக செலவு செய்வது மற்றும் புத்திசாலித்தனமான முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – செப்பு பாத்திரம். அதிர்ஷ்ட நிறம் – கோபால்ட் அதிர்ஷ்ட எண் – 33
துலாம்:
உங்களது மனதை அமைதியாக்கும் விஷயங்களில் ஈடுபட இன்று முன்னுரிமை கொடுங்கள். புரிந்துணர்வு மற்றும் சமரசம் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியிருக்கும். நிதி சார்ந்த புதிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உரிய நிபுணர்களிடம் ஆலோசித்து கொள்ளுங்கள். இயற்கையில் நேரத்தை செலவிட இன்று முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – பம்பரம் அதிர்ஷ்ட நிறம் – கருநீலம் அதிர்ஷ்ட எண் -17
விருச்சிகம்:
இன்று மனதை உறுதியாக வைத்து கொள்வதும், பணிகளில் ஈடுபடும் போது கவனத்தை சிதற விடாமல் இருப்பதும் தடைகளை சமாளிக்க உதவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பான செயல்கள் உங்கள் உறவுகளை பலப்படுத்தும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பண ஆதாயங்கள் இன்று கிடைக்கலாம். சுய கவனிப்பு இன்று உங்களுக்கு தேவையான ஒன்று.
அதிர்ஷ்ட அடையாளம் – உங்களுக்கு பிடித்தமான கதாபாத்திரம் அதிர்ஷ்ட நிறம் – பிரவுன் அதிர்ஷ்ட எண் – 8
தனுசு:
உங்களது வெளியுலக அனுபவத்தை மேம்படுத்தும் புதுமையான வாய்ப்புகளை தேடுங்கள். உங்கள் நேர்மறையான எண்ணம் இன்று உங்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உங்களை பாராட்டும் வண்ணம் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இன்று தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஆற்றங்கரை அதிர்ஷ்ட நிறம் – வயலட் அதிர்ஷ்ட எண் – 24
மகரம்:
இன்று உங்கள் வாழ்விற்கு தேவையான இலக்கை நிர்ணயிப்பதோடு அவற்றை நோக்கி நிலையான உழைப்பு மற்றும் முயற்சி தேவை. உங்கள் கடும் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் தியாகத்தை மதிப்பார்கள். இதுவரை செல்லாத இடங்களுக்கு பயணிப்பது புத்துணர்ச்சி அளிக்கும். தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவிடாமல் இருந்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் வராது.
அதிர்ஷ்ட அடையாளம் – புனித தலம் அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை அதிர்ஷ்ட எண் – 10
கும்பம்:
இன்று உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துவதும், மனதில் தோன்றும் புதுமையான திட்டங்களை செயல்படுத்துவதும் வெற்றியை தேடி தரும். உங்கள் புதிய யோசனைகள் பலரின் பாராட்டுகளை பெற்று உயரிய அங்கீகாரம் பெறலாம். முதலீடு விஷயங்களில் கவனமுடன் இருப்பது முக்கியமானது. மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை பராமரிக்க நேரம் செலவிடுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – செம்பருத்தி பூ அதிர்ஷ்ட நிறம் – நீலம் அதிர்ஷ்ட எண் – 15
மீனம்:
இன்று உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்க கூடும். உங்களின் கடமை உணர்ச்சி பாராட்டுகளை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிதி விஷயங்களில் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க நீங்கள் ராஜதந்திர நடவடிக்கையை செய்வது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் – லேம்ப் அதிர்ஷ்ட நிறம் – டர்க்கைஸ் அதிர்ஷ்ட எண் – 20