திருகோணமலையில் 61 எரிபொருள் கொள்கலன்கள் 50 வருட குத்தகைக்கு

திருகோணமலை சீனா துறைமுக பகுதியில் உள்ள 99 எரிபொருள் கொள்கலன்களில் 61 கொள்கலன்கள் 50 வருக்காலத்திற்கு டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எரிபொருள் கொள்கலன்களை புதுப்பிக்கும் செயற்பாடானது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுமென டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான திறன் தங்களிடம் இருப்பதாகவும், இந்த நிலைமையானது பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், செலவைக் குறைக்க உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கு களஞ்சிய வசதி தேவையில்லை எனில் சர்வதேச தரப்பினரின் களஞ்சிய தேவைக்காக இடத்தினை குத்தகைக்கு வழங்குகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் கொள்கலன்கள் 1938 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள பிரித்தானிய ஸ்தாபனத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன. நீண்டகாலமாக பராமரிப்பின்றி காணப்படும் குறித்த கொள்கலன்கள் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் சாலிய விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin