பதவி விலகத் தயார்: பார்சிலோனா பயிற்றுவிப்பாளர்

அணி தன்மீது நம்பிக்கை இழந்தால் தான் பதவி விலகத் தயாராய் இருப்பதாகக் கூறியுள்ளார் பார்சிலோனா கால்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளர் ‌ஸாவி ஹெர்னாண்டஸ்.

சென்ற வாரம் நடைபெற்ற ஸ்பானிய சூப்பர் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பார்சிலோனா, ரியால் மட்ரிடிடம் 4-1 எனும் கோல் கணக்கில் மோசமாகத் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்தே ஸாவி இவ்வாறு அறிவித்துள்ளார்.

“எனது விளையாட்டாளர்கள் என் மீது நம்பிக்கை இழக்கும் நாள் வரும்போது நான் பதவி விலகுவேன்,” என்றார் ஸாவி.

இந்தப் பருவம் தற்காப்பு ஆட்டத்தில் பார்சிலோனா பெரிதும் சிரமப்பட்டுள்ளது. லா லீகா லீக்கில் அக்குழு இதுவரை 22 கோல்களை விட்டுக்கொடுத்துவிட்டது.

சென்ற பருவம் முழுவதும் 20 கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது பார்சிலோனா.

பிரச்சினைகளைத் தன்னால் சரிசெய்ய முடியும் என்று ‌நம்புகிறேன். ஆனால், நிலைமை சீராகாவிட்டால் பதவி விலகவும் தயாராய் இருப்பதாகவும் ஸாவி அணியின் நிர்வாகத்திடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin