பிபாவின் அனுசாரணையுடன் நான்கு நாடுகள் பங்கெடுக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரை இலங்கையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்டாரின், தோஹாவில் அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடக்க விழாவின் போது இதற்கான யோசனை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிபா தலைவரால் கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்த உலகத் தொடர், போட்டியில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு 2027 பிபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றுகளின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பினை வழங்கும்.
இந்த போட்டியில் இலங்கையுடன் மற்றுமொரு ஆசிய நாடும், ஓசியானியா நாடொன்றும், ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும் விளையாடும்.
இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் பிபா இணைந்து இந்த போட்டி பற்றிய உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை எதிர்வரும் நாட்களில் வெளியிடும் என்று FSL உமர் ஜஸ்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.