கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகளுக்கான கள விஜயமொன்று இன்று இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் திருவிழாவின் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், கள நிலவரங்கள் தொடர்பிலும் ஆராயவும் இலங்கையிலிருந்து ஒரு குழுவினர் கச்சத்தீவு நோக்கி பயணித்துள்ளனர்.
இவ் விஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீமோகனன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் அ.ஜெயகாந்தன், நெடுந்தீவு பங்கு நிலை அருட்சகோதரர். பீ.பீற்றர் ஜெயநேசன் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினரும், மற்றும் தீவக கடற்படையின் பிரதான கண்காணிப்பாளர் மற்றும் கடற்படையினர் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வருடாந்த திருவிழாவில் இந்திய ,இலங்கை மக்களின் வருகையும், அவர்களுக்கான தங்குமிடவசதிகள், தேவாலயத்தின் துப்பரவுப்பணிகள், மருத்துவசதி உதவிகள், குடிநீர் பெற்றுக்கொடுத்தல், சிற்றூண்டி வசதிகள்,படகுசேவை போக்குவரத்து ஒழுங்குகள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.