400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் நாடுகளுக்கு சென்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை செலுத்த முடியாதுள்ள ஏழை மக்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகிறது. எனினும் அமைச்சர்களுக்கு அவ்வாறான பிரச்சினைகள் எதுவும் இல்லை.
மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
நீர்த்தேக்கங்கள் நிரம்பியிருக்கும் போது குறைந்த விலையில் நீர் மின்சாரம் வழங்க முடியும்.
52 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய மின்சார சபை அதன் நிவாரணத்தை மக்களுக்கு வழங்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.