கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,
குறித்த சிறுவன் சிறுவயது முதலே பொழுதுபோக்காக இரும்பு சுத்தியல், இரும்பு கம்பிகளில் இறப்பர் பட்டியை கட்டி சுழற்றி விளையாடி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
உயிரிழந்த தினத்தன்றும் சிறுவன் அவ்வாறே விளையாடியுள்ளார்.
கற்களை உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உளியில் ரபர் பேண்டை கட்டி விளையாடும் போதே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, முற்றத்தில் விளையாடுவதற்காக சிறுவன் சென்றுள்ளார்.
இதன்போது இரும்பு உளி தலையில் பலமாக மோதியதுடன் இறப்பர் பேண்ட் கழுத்தை நெரித்ததால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக முற்றத்தில் சிறுவன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
சிறுவனை பார்த்த அயலவர்கள் அதுபற்றி பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்தே அவர்களுக்கு தெரியவந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் பொத்துப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக கலவானை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பெற்றோரின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துப்பிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.