உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் செல்லவுள்ளார்.
உலக பொருளாதார மாநாட்டின் போது உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.
இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த வருடம் உலகப் பொருளாதார மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை.
அதனால் இம்முறை ஜனாதிபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென அரசாங்கம் கூறுகிறது. குறிப்பாக உலக முதலீட்டாளர்களுடன் நடைபெறும் சந்திப்பில் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்குமெனவும் அரசாங்கம் தெரிவிக்கிறது.
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக 18ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் இருந்து உகாண்டா செல்ல உள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.