பாகிஸ்தான் அணியின் உப தலைவரானார் ரிஸ்வான்

பாகிஸ்தான் டி:20 கிரிக்கெட் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடருக்கு முன்னதாக இந்த நியமனம் வந்துள்ளது.

கணுக்கால் காயத்தைத் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ஷதாப் கானுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெரிவித்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தை தொடர்ந்து பாபர் அசாம், அணித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பாகிஸ்தான் தலைமைக் குழு மற்றும் அணியில் ஏற்பட்ட அண்மைய மாற்றமாக ரிஸ்வானின் நியமனம் அமைந்துள்ளது.

2023 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் ஒன்பது ஆட்டங்களில் நான்கு வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது மற்றும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறிவிட்டது.

நியூஸிலாந்துடனான பாகிஸ்தானின் 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் போட்டி ஜனவரி 12 ஆம் திகதி ஆக்லாந்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin