கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1,008 பொங்கல் பானை, 1,500 பரத நாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ராசமாணிக்கம் சாணக்கியன், சதாசிவம் வியாழேந்திரன், கபில நுவன் அத்துகோரள மற்றும் மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் இந்திய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பலரும் பங்கேற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.