உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவுஸ்திரேலியா முதலிடம், இலங்கைக்கு கடைசி இடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற ரீதியில் முன்னிலைப்பெற்றுள்ளது.

இதனையடுத்து 56.25 சதவீத புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

எனினும், இந்திய அணியின் முதலிடம் வெகு நேரம் நீடிக்கவில்லை. சிட்னியில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியாவின் வெற்றி புள்ளிப் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ாழ

இதன்படி, 56.25 சதவீத புள்ளிகளுடன், அவுஸ்திரேலியா இப்போது முதல் இடத்திலும், 54.16 சதவீத புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இடத்திலும், 50.00 சதவீத புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

பாகிஸ்தான் 36.66 சதவீத புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை அணி எவ்விதப் புள்ளிகளும் இன்றி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதனை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin