பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ’13’ இன் அதிகாரங்கள் போதுமானது

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

“மாகாண மட்டத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது.

மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தற்போது மேல்மாகாணத்திற்கு மட்டுமே நிதி சுதந்திரம் காணப்படுகிறது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும்” எனவும் ஜகாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

Recommended For You

About the Author: admin