ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், சுதேச மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத பொருட்கள், மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட அலுவலகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உள்ளூர் மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் முயற்சியின் கீழ் ஆயுர்வேத சுகாதார நிலையங்கள் (உடல் மந்திரங்கள்) உள்ளூர் மருத்துவத் துறைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin