ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்பை வெளியிட்டுள்ள ரயில்வே கடவை காப்பாளர்கள்

வடக்கிற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் 24 மணிநேர பணிப்பபுறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு ரயில்வே கடவை காப்பாளர் சங்க தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்திற்கு நாம் எதிர்ப்பை தெரிவிகின்றோம்.

நாடு முழுவதும் உள்ள 2064 பரயில்வே கடவை ஊழியர்கள் அடிமைகளாக, நயவஞ்சக முறையில் நடத்தப்படுகின்றனர். மேலும் இவர்களை பொலிஸாரிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியே 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளோம்.

அதன்படி, நாளை 4 ஆம் திகதி முதல் நாளை மறுதினம் 6 ஆம் திகதி வரையான 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளோம். இந்த காலப்பகுதிக்குள் ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்துகின்றோம்.

பி.ஏ.சி 25 கீழ் 2014 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஆறுமாத காலத்திற்குள் அரச திணைக்களங்களில் சேவையாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் 2064 ரயில்வே கடவை ஊழியர்கள் உள்வாங்கப்பட்டனர்.

நாள் ஒன்றுக்கு 250 ரூபா என்ற அடிப்பயைில் அவர்களின் மாத வருமானம் 7500 ரூபாவாகும். தங்களின் எதிர்காலத்தினையே அரப்பணிக்கு நாட்டு மக்களை பாதுகாக்கின்ற கடமையில் உத்தரவாதமற்ற நிலையில் தொழில் புரிகின்றனர்.

இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையில் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ரயில் கடவை காப்பாளர்கள், ரயில் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்படுவதோடு, அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட ஜனாதிபதியின் உடனடி தலையீடு அவசியமாகும்.

இதற்கு தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் இந்த நாடு பாரதூரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக ரயில்வே திணைக்களத்தின் சேவைகள் ஸ்தம்பிதமடையும் என்பதை வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin