வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ‘மனித ஆட்கொலை’ பிரேத பரிசோதனையில் உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலாக வழக்கு விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணை நேற்யை தினம் இடம்பெற்றது.

இதன்போது, உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை மன்றிற்று சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில், உயிரிழந்த இளைஞனின் உடலில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும், இதனாலே மரணம் நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாட்சியங்களின் அடிப்படையில் இதுவரையில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை விசாரணைக்கு உட்படுத்தி மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து வழக்கு விசாரணைகளுக்கான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு வழங்கி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin