யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிவேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடும் நடவடிக்கை
இந்நிலையில் டெங்கு நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேற்றைய தினம் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படத்த சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.