பிரபல கொலம்பியப் பாடகி ஷகிராவுக்கு அவரது சொந்த ஊரான பரான்கில்லாவில் வெங்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
6.5 மீட்டர் உயரம் கொண்ட அந்தச் சிலை, அவர் வளைந்து நடனமாடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது.
சிலையின் அடியில் “ஓயாத இடுப்பு, ஒப்பற்ற திறன், மக்களை மயக்கும் குரல்” என்று எழுதப்பட்டுள்ளது.
ஷகிரா, சிலைக்கு முன் தமது பெற்றோர் நிற்கும் படங்களை அவரது Instagram பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
சென்ற ஆண்டு Google தளத்தில் அதிகம் தேடப்பட்ட பெயர்களில் ஒன்று ஷகிரா ஆகும்.
அண்மையில் YouTube தளத்தில் அவர் தமது முன்னாள் காதலர் விளையாட்டாளர் ஜெரார்ட் பிக் (Gerard Pique) பற்றி வெளியிட்ட பாடல், லத்தீன் அமெரிக்க நாடுகளில் பல முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
அண்மையில் வரி மோசடியில் 7.5 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்ட போதும் ஷகிராவின் பெயர் செய்திகளில் அதிகம் அடிபட்டது.
தனது 13 வயதில் பாடத் தொடங்கிய ஷகிரா, 145க்கும் அதிகமான படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவரது படைப்புகள் 95 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
ஷகிரா, லத்தீன் இசையின் அரசி என்று பெயர் பெற்றவர்.