நிலாவை ஆய்வு செய்யும் நோக்கில் ஜப்பானால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் சந்திர சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிலையம், Smart Lander for Investigating Moon என்ற திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
இது சந்திர மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட இலக்கிலிருந்து 100 மீட்டர் (328 அடி) தொலைவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விண்கலம் ஜப்பான் நேரப்படி மாலை 04.51 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது” என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு, நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பானை மாற்றும்.
நிலவை நோக்கி லேண்டரை தரையிறக்கும் திட்டம் ஜனவரி 20ஆம் திகதி ஜப்பான் நேரப்படி நள்ளிரவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், H-IIA ரொக்கெட் செப்டம்பர் மாதம் தெற்கு தீவான தனேகாஷிமாவிலிருந்து லேண்டரை சுமந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.