முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் உக்ரைன்

உக்ரைனில் இந்த ஆண்டு முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உக்ரைனில் பாரம்பரியமாக ஜூலியன் நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது.

ரஷ்யாவிலும் இந்த நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி, குறித்த நாடுகளில் ஜனவரி 7 ஆம் திகதி அன்றே வழமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கடந்த ஜூலை மாதம் அந்த நாட்டு சட்டத்தை மாற்றியமைத்தார்.

இந்த சட்ட மாற்றமானது உக்ரேனியர்கள் ஜனவரி மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் ரஷ்ய பாரம்பரியத்தை கைவிடுவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த பின்னணியில் உக்ரேனியர்கள் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

Recommended For You

About the Author: admin