வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மதுபோதையில் மற்றும் அதிவேகமாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு பிரதான மற்றும் குறுக்கு வீதிகளில் பொலிஸாரை 24 மணிநேரம் பணியில் ஈடுபடுத்தடுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த வீதி விபத்துகளில் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்போடுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.