34 ஆயிரம் இணைய கணக்குகள் முடக்கம்: 6 ஆயிரம் பேருக்கு தண்டனை

சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில், வதந்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் 34 ஆயிரம் இணையத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பான இதுவரை 4 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீன பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி லி டொங்க் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பி சமூக ஒழுக்கத்தையும், சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் இணைய கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் இந்த நடவடிக்கை சிறந்த பலனை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் இணையத்தளம் வழியாக நடக்கும் வன்முறைகள், குற்றங்கள், இழிவுபடுத்துதல், தனிப்பட்ட விபரங்களை திருடுதல், போன்ற செயல்களுக்கு எதிராக சீன பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 110 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin