ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளை பொருத்தவரை செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அந்த நிறுவனங்களின் தளங்களில் நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இவைதான் அதிகாரப்பூர்வமான, முறையான செயலிகளாக பார்க்கப்படுகின்றன.
வேறு மூன்றாம் தர பிரௌசர்களில் இருந்தோ அல்லது கூகுள் தேடலின் மூலமோ தரவிறக்கம் செய்யப்படும் செயலிகள் உங்கள் சாதனங்களுக்கும், உங்களுக்கும் தீங்கு விளைவிக்கலாம்.
உங்களின் தனிப்பட்ட தகவல்கள் மட்டுமின்றி பல விஷயங்களை நீங்கள் பறிகொடுக்க நேரிடும். இருப்பினும், சில அபாயகரமான செயலிகள் பிளேஸ்டோரிலேயே இருப்பதும் இங்கே காணப்படுகிறது.
அடிக்கடி அதனை சரிபார்த்து அந்த அபாயகரமான செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கும்.
அந்த வகையில், சமீபத்தில் கூகுள் நிறுவனம் அதன் பிளேஸ்டோரில் இருந்து 18 செயலிகலை கூகுள் நீக்கியுள்ளது.
இந்த செயலிகள் மக்களிடம் இருந்து கடன் வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆனால் உண்மையில் செயலிகள் பயனரை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து அவர்களின் தொடர்பு விவரங்கள், இருப்பிடத் தரவு மற்றும் பிரௌசிங் ஹிஸ்டரி போன்ற பெரிய அளவிலான தகவல்களைச் சேகரிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை வைத்து, அவர்கள் பயனர்களை மிரட்டி அதிக வட்டியை வாங்கி பணமோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Spyloan செயலிகள் சமூக ஊடகங்கள் மற்றும் எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன.
கூகுள் நிறுவனத்திற்கு 18 செயலிகள் பற்றிய தகவல்களை தங்களுக்கு வழங்கியுள்ளதாக ESET நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 17 செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் ஆப்ஸின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டிருப்பதால், அதே செயல்பாடுகளையோ அதே அனுமதிகளையோ வழங்காததால், ஒரு செயலி மட்டும் இன்னும் பிளேஸ்டோரில் உள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் இந்த செயலிகளை அகற்றியுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த செயலிகளை தங்கள் மொபைலில் வைத்திருந்தால் உடனடியாக டெலிட் செய்து விடவும்.
கூகுள் அதன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய அந்த 17 செயலிகளை இங்கு காணலாம். 👇
– AA Kredit
– Amor Cash
– GuayabaCash
– EasyCredit
– Cashwow
– CrediBus
– FlashLoan
– PréstamosCrédito
– Préstamos De Crédito-YumiCash
– Go Crédito
– Instantáneo Préstamo
– Cartera grande
– Rápido Crédito
– Finupp Lending
– 4S Cash
– TrueNaira
– EasyCash