ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான்கு பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள நான்கு பேரின் பெயர்களில் வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவின் பெயரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் கட்சி என்ற வகையில் குறிப்பிட்ட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் வர்த்தகத் துறையில் முதலிடத்திற்கு வந்துள்ள தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், பொருளாதாரத்தின் பல துறைகளிலும் கற்று அனுபவம் பெற்றவர் ஆவார்.
தம்மிக்க பெரேரா இதற்கு முன்னர் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது