இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்வதால் ஒருவரை தீவிரவாதியாகவோ அல்லது இலங்கைக்கு எதிரானவராகவோ கருதிவிட முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் தொடர்பான நிழக்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்கள் காணப்படுகிறது.
புலம்பெயர் தேசத்தின் ஒரு பகுதியாக ஒருவர் இருப்பதால் அவரை தீவிரவாதியாகவோ அல்லது இலங்கைக்கு எதிரானவராகவோ மாற்ற வேண்டியதில்லை.
இன, மத வேறுபாடின்றி வேறு நாட்டில் வாழும் எந்தவொரு இலங்கையரும் புலம்பெயர்ந்த இலங்கையர்களின் ஒரு பகுதியாகும்.
இலங்கையில் இடம்பெற்ற கசபான சில வரலாற்று நிகழ்வுகள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்க விரும்பும் புலம்பெயர் தேசங்களில் உள்ளவர்கள் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்கின்றனர்.
புலம்பெயர் மக்களை நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவது அவசியமாகும். அவர்களின் முதலீட்டை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில், வெளிநாடு வாழ் இலங்கை மக்களது விவகாரங்களை கையாள https://oosla.lk/ என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தை சாகல ரத்னாயக்க திறந்து வைத்தார்.