எந்தவொரு விடயம் தொடர்பான சந்தேகம் என்றாலும் சட்டென்று கூகுளில் தான் பலரும் தேடுவோம்.
ஆனால் கூகுளில் எதையெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி அறிவீர்களா?
சட்டவிரோதமான தகவல்களை தேடுவது பெரும் தவறு. உதாரணத்திற்கு வெடிகுண்டு எவ்வாறு தயாரிப்பது என்று கூகுள் செய்வது சட்டவிரோதமாகும்.
இந்தியாவில் சிறுவர் ஆபாசச் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. அவற்றைத் தேடுவது சட்ட விரோதமான செயல்.
பிறக்கும் முன் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய முயல்வது பல நாடுகளில் சட்ட விரோதம் தான்.
கலந்தாலோசிக்காமல் உடல்நலக்கோளாறுகளுக்கு கூகுளில் மருந்துகளை தேடினால் நிச்சயம் ஆபத்தில் கொண்டு விட்டு விடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
செல்போனில் எதாவது செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம்.
Android ஆப் என்றால் Google Play-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும்.