தெரிவுக்குழுவால் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படாது: குமார தர்மசேன

இலங்கையில் கிரிக்கெட்டை விருத்தி செய்ய வேண்டுமானால் எதிர்வரும் பத்து வருடங்களுக்கான கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு அதனை பின்பற்ற வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்துள்ளார்.

“2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க மிகவும் பொருத்தமான அணித்தலைவர் இப்போதே கண்டறிய வேண்டும்.

தெரிவுக்குழு உறுப்பினர்களை மாற்றுவதால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

இலங்கை கிரிக்கெட்டில் பல விடயங்கள் மாற்றப்பட வேண்டும். கிரிக்கெட்டில் மாற்றங்கள் காலம் காலமாக நடந்து கொண்டிருக்க வேண்டிய விடயம். ஆனால் இலங்கை அதனை கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது.

இலங்கை அணியை விட தாழ்வாக இருந்த அணிகள் தற்போது இலங்கையை கடந்துள்ளன. அந்த நாடுகள் தொடர்ச்சியாக பின்பற்றிவரும் கிரிக்கெட் கொள்கைதான் அதற்கு காரணம்.

ஆகவே, தெரிவுக்குழு உறுப்பினர்கள் மாற்றப்படுவதால் அணியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அதனை பின்பற்றுவதன் ஊடாகவே அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை அணியில் உருவாக்க முடியும்.” என்றும் குமார தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin