மலேசியாவில் தலை தூக்கிய கொவிட்

மலேசியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், முடக்கநிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது நேற்று அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலேசியாவில் கொவிட் தொற்று மீணடும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

கொவிட் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்காமல் இம்முறை நிலைமையை எம்மால் சமாளிக்க முடியும்.

கொவிட் தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு ஐந்து முனை உத்திகளை தயாரித்துள்ளது. இதில் கொவிட் தொற்று பாதிக்கப்பட்டோரை முன்கூட்டியே அடையாளம் காணும் தளங்களும் உள்ளடங்குகின்றது” என தெரிவித்தார்.

மலேசியாவில் டிசம்பர் 10 ஆம் திகதிக்கும் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 20,696 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல் டிசம்பர் 3 ஆம் திகதிக்கும் 9ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 12,757 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுடன், 11 பேர் உயிழிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin