லிபிய கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 61 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
லிபியாவின் Zuwara நகரில் இருந்து 86 பேருடன் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் அலையில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 25 பேர் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நைஜீரியா உள்ளிட்ட ஏனைய ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குள் பிரவேசிக்க முயலும் புலம்பெயர்ந்தோர் வெளியேறும் மிக முக்கிய இடங்களில் லிபியாவும் உள்ளது.
இதன்படி, இந்த வருடம் மாத்திரம் 2,200 இற்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இது உலகின் மிகவும் ஆபத்தான இடம்பெயர்வு பாதைகளில் ஒன்றாகுமென இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது