உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சீனாவில் தற்போது கடுமையான குளிர் காலநிலை நிலவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீதிகள் பனிக்கட்டிகளினால் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சீனாவின் பல்வேறு மாகாணங்களில் போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ரஷ்யா முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யாவில் இவ்வாறு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தலைநகர் moscow இல் உள்ள வீதிகள் 20 சென்டி மீட்டருக்கு அதிகளவான அடர்த்தியான பணியினால் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவைத் தாக்கும் வலுவான பனிப்புயல் இது என கூறப்படுகிறது.
அத்துடன், பிரித்தானியா, பின்லாந்து மற்றும் அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.