காதுகளை பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? இதனை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்

பெரும்பாலான நபர்கள் தங்களது காதுகளை சுத்தம் செய்வதற்கு இயர் பட்ஸ் வைத்து சுத்தம் பண்ணிவரும் நிலையில், இது ஆபத்தை விளைவிக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இயர் பட்ஸ் பயன்படுத்தக்கூடாதா?
காதுக்கு பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது செவிப்பறைக்கு பாதுகாப்பானது அல்ல.. எனவே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை காதுகளை சுத்தம் செய்ய பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

பேபி ஆயில் காதுகளை சுத்தம் செய்ய பயன்படுகின்றது. நம் காதுகளில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் பேபி ஆயிலை விட்டு, பின்பு சுத்தமான துணியால் காதை சுத்தம் செய்தாலே போதுமாம்.

காதுகளில் இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாப்பிடும் உணவின் சுவையை தெரிந்துகொள்ள உதவும் காதில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு இயர் பட்ஸ் பயன்படுத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகின்றது.

இயர் பட்ஸ் மட்டுமின்றி, குச்சி, ஹேர்பின் ஆகியவற்றையும் காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Recommended For You

About the Author: webeditor