கிரிக்கெட் விளையாட்டில் போட்டிகளில் அதிகளவில் பணம் கிடைப்பதில்லை எனவும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமை ஊடாகவே அதிகளவில் பணம் கிடைப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
போட்டிகளில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் ஒளிப்பரப்பு உரிமைக்கான முழுப்பணமும் செலுத்தப்படும்.
இந்த விதத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பணத்தில் 11 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளில் உள்ள வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. அவை இலங்கையை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான வங்கிக்கணக்குகள்.
கோப் குழு இது தொடர்பாக தடயவியல் கணக்காய்வை நடத்தியது. இதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், கோப் குழுவும் கலைந்தது. தற்போது அந்த விசாரணைகள் திறந்தே உள்ளன.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இது சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.