ரணிலின் ‘பட்ஜெட்’ கீழ்த்தரமானது

சாதாரண மக்களைப் புறக்கணித்து பெரும் செல்வந்தர்களை போஷிக்கும் வரவு – செலவுத் திட்டம் மூலம் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டவில்லை. இதனை மிகவும் கீழ்தரமான வரவு – செலவுத் திட்டம் என்றே அழைக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இன்னும் 8 தவணைகளைப் பெற வேண்டும். எனவே, இரண்டாம் தவணை கிடைத்தமைக்காக ஆரவாரப்பட்டு கொண்டாடக் கூடாது.

ஊழலை எதிர்க்கும், ஊழலை இல்லாதொழிக்கும் மற்றும் நல்லாட்சிக்காக தயாராகும் எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும்.

ரொஷான் ரணசிங்க, அவருக்கு இருந்த அனைத்து அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும், வரப்பிரசாதங்களையும் மறந்து ஒரு கொள்கை ரீதியான முடிவை அணுகியது சீரழிந்து வரும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து,புதிய பிரவேசத்தின் தொடக்கமே.” என்றார்.

Recommended For You

About the Author: admin