எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஜனவரி மாதம் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தெரிய வருகிறது.
உருவாக்கப்படும் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட உள்ளார். குறித்த கூட்டணி வெற்றிபெற்ற பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் ஜீ.எல்.பீரிஸை பிரதமராக நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர ஜனதா சபையின் சில உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சுதந்திர ஜனதா சபையிலிருந்து வெளியேற தயாராகி வருவதாகவும் அறிய முடிகிறது.
சுதந்திர ஜனதா சபையின் உரிமையாளரான நாலக கொடஹேவா எதிர்காலத்தில் சுதந்திர ஜனதா சபையை கலைத்துவிடுவார் அல்லது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துக்கொள்ளக் கூடும் எனவும் தெரிய வருகிறது.