மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீட்பு

மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

ஈப்போ, மாஞ்சுங் மற்றும் தாபா ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனித்தனி சோதனைகளில் வேலையின்றி கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 86 வெளிநாட்டு தொழிலாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நடவடிக்கை நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் துறை தலைமை இயக்குநர் கமல் பார்டி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மலேசியா கட்டாய தொழிலை நடைமுறைப்படுத்துகிறது என்ற சர்வதேச குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காகவும் இவை மேற்கொள்ளப்பட்டன.

முதல் நடவடிக்கையில், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 52 தொழிலாளர்கள் ஈப்போவில் சோதனை செய்யப்பட்டனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் அமைப்பின் (UNHCR) அகதிகள் அட்டைகளை ஏழு பேர் மட்டுமே கொண்டிருந்தனர், மேலும் 14 பேரிடம் சரியான பயண அல்லது பணி ஆவணங்கள் இல்லை.

மாஞ்சுங் மற்றும் தபாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நடவடிக்கைகளில், 17 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக மேரு ராயாவில் கட்டுமானப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்டனர்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச வீட்டுவசதி மற்றும் வசதிகள் (திருத்தம்) சட்டம், 2019 (சட்டம் 446) ஆகியவற்றை முதலாளிகள் மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெரிசலான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர் மற்றும் படுக்கைகள் அல்லது மெத்தைகள் எதுவும் கிடைக்காததால் ரப்பர் விரிப்பில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஊழியர்களை இவ்வாறு நடத்தும் முதலாளிகளுடன் துறை சமரசம் செய்து கொள்ளாது, இது கட்டாய தொழில் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கமல் கூறினார்.

அனைத்து துறைகளிலும் உள்ள முதலாளிகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் சரியான வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான தங்குமிடங்களை வழங்க வேண்டும். என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin